30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு அதிரடி

30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:  தமிழக அரசு அதிரடி
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப்பை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரனும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த குமரகுருபரன்,தகவல் தொழில்நுட்ப துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி மாவட்ட ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை ஆட்சியராக கிராந்திகுமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!