Toofan..Toofan என்று சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்ங்க..!
toofan meaning in tamil-சூறாவளி (மாதிரி படம்)
Toofan Meaning in Tamil-Toofan என்றால் சூறாவளி, சுழல்காற்று, சுழல் மற்றும் சூறாவளி. காற்றின் சுழற்சி பொதுவாகவே காற்றழுத்தம் அதிகம் உள்ள பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்தம் உள்ள பகுதி நோக்கி வீசும். இந்த சுழலும் காற்றின் அமைப்பே சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
KGF -2 படப்பாடல் :
சூறாவளி என்பது தமிழில் பல்வேறு இடங்களில் உவமையாக பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் வந்த KGF திரைப்படத்தில் கூட Toofan Toofan என்று ஒரு ஹிட் பாடல் வந்துள்ளது. அந்த பாடலில் உள்ள கருத்துப்படி தன்னுடைய சொந்த நலனை பார்க்காமல் சூறாவளி போல சுழன்றடித்து மக்களின் தலைவனாக நாயகன் நிற்கிறார் என்பது பொருள்பட அந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பு
யாரவது ஒருவர் எதையும் விரைவாக சுறுசுறுப்பாக முடித்தால், அட சூறாவளி போல செயல்படுகிறார் என்போம். கிராமங்களில் எப்போதும் ஓடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பவர்களை பெரியவர்கள் கிண்டலாக 'சூறாவளிக்கு பொறந்த பய' என்பார்கள். குத்துச் சண்டையில் கூட சூறாவளி போல சுழன்றடிக்கும் வீரர் என்று கூட சொல்வதுண்டு.
வேகம், உறுதி, அழித்தல் போன்ற செயல்பாடுகளில் சூறாவளி அதாவது toofan என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu