டோக்கியோ பாராலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ்நர்வால், சிங்ராஜ்அதானாவுக்கு முதல்வர் பாராட்டு

டோக்கியோ பாராலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ்நர்வால், சிங்ராஜ்அதானாவுக்கு முதல்வர் பாராட்டு
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

டோக்கியோ பாராலிம்பிக்சில் பதக்கங்கள் வென்ற மனீஷ் நர்வால், சிங்ராஜ் அதானாவுக்கு பாராட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள பாராட்டு செய்தியில் குறிப்பிட்டதாவது:

டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மனீஷ் நர்வால் அவர்களுக்கும் , தனது இரண்டாவது

பதக்கத்தை வென்றிருக்கும் சிங்ராஜ் அதானா அவர்களுக்கும் எனது பாராட்டுகள். நமது பாராலிம்பிக் வீரர்களின் இந்தச் சிறப்பான வெற்றிகள் மேலும் பல திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவிடும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்