காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
X
காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கப்படும்; உணவு மானியமாக ரூ. 7500 கோடி ஒதுக்கப்படும் என்று, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும். அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்

உணவு மானியமாக ரூ. 7500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 64 பெரிய அணைகளின் பராமரிப்புக்கு ரூ. 1064 கோடி செலவிடப்படும்.

தமிழக காவல்துறைக்கு ரூ.10282 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆதரவற்றோர், விதவைகள் போன்றோரின் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு 4816 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!