பட்ஜெட்டில் மேற்கு மண்டலத்திற்கு என்னென்ன சலுகைகள்?

பட்ஜெட்டில் மேற்கு மண்டலத்திற்கு என்னென்ன சலுகைகள்?
X
கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் விவரம் வருமாறு:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, இதுதவிர சாத்தனூர், பாபநாசம், சோலையார் உள்பட, 64 அணைகள் புனரமைக்கவும், பாதுகாப்பு மற்றும் செயல் திறனை மேம்படுத்தவும், இரண்டாம் அணை புனரமைப்பு திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் சேத்துமடை, திண்டுக்கல் மாவட்டம் மணவனூர், தடியன் குடிசை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஆகிய பகுதிகளில், தனியார் பங்களிப்புடன் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள் அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்டம் உதகையில், ரூ.10 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!