மேகதாது: தமிழக சட்டசபையில் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது: தமிழக சட்டசபையில் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
X

பேரவையில் தீர்மானத்தை வாசித்த அமைச்சர் துரைமுருகன். 

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டத்து. சட்டப்பேரவையில் தீர்மானத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்து முன்மொழிந்தார்.

அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன், நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை நாம் விட்டு விடுவோம். காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம்; தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும்.

உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா அணைகட்ட முயற்சிக்கிறது. நீதிமன்றம் சொன்னதைக் கூட ஒரு மாநில அரசு கேட்க மறுப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. தமிழகம் தண்ணீருக்கு கையேந்தும் நிலையில் உள்ளது.

நாம் அணை கட்ட அனுமதித்தால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள். அண்டை மாநிலத்துடன் நல்லுறவு பேணும் அதே நேரத்தில், மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக் கூடாது என்று பேசினார்.

இதை தொடர்ந்து தீர்மானம், ஒருமனதாக பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திஅதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை ஆதரவு அளித்தன.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil