நாளை உறுப்பினர்கள் பதவியேற்பு: கூட்ட அரங்குகள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
கூட்ட அரங்குகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நடந்து முடிந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் பத்து பேரூராட்சிகளிலும் திமுக பெரும்பான்மையான இடங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் வரும் 2ம் தேதி நாளை பதவி ஏற்பதற்கான பணிகள் தீவிரமாக தற்போது நடந்து வருகிறது.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அளித்த வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டுவந்து கவுன்சிலர்கள் பதவி ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய உள்ளாட்சி அமைப்பின் பதவி காலம் முடிந்தது. அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மன்ற கூட்ட அரங்குகள் பயன்பாடின்றி இருந்தன.
மேலும் வரும் 4ஆம் தேதி காலை 10 மணி அளவில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி அளவில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.
தலைவர் பதவிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தால் மட்டுமே வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்தால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் வரும் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு
நகராட்சி ஒதுக்கீடு
திருவண்ணாமலை பெண்
ஆரணி பொது
செய்யாறு பொது
வந்தவாசி பொது
பேரூராட்சிகள்
செங்கம் பொது
புதுப்பாளையம் எஸ்.சி பெண்
கீழ்பெண்ணாத்தூர் எஸ்சி பொது
வேட்டவலம் பெண்
போளூர் பெண்
சேத்துப்பட்டு பெண்
கண்ணமங்கலம் பெண்
களம்பூர் பொது
பெரணமல்லூர் பெண்
தேசூர் எஸ்.சி பெண்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu