வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருண்குமார்.

வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது, மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அலத்துறை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் அருண்குமார் (வயது 25). இவர் மீது கீழ்க்கொடுங்காலூர், வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் கீழ்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தன்னை போலீசில் காட்டி கொடுப்பதாக நினைத்த அருண்குமார், அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் அருண்குமாரை கீழ்க்கொடுங்காலூர் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பரிந்துரையை ஏற்று அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள அருண்குமாரிடம் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai automation in agriculture