ஆந்திர கல்குவாரியில் கொத்தடிமைகளாக உள்ளவா்களை மீட்கக் கோரி பெண் மனு
போலீசாரிடம் மனு அளித்த காளியம்மாள் குடும்பத்தினர்
ஆந்திர மாநில கல்குவாரியில் கொத்தடிமைகளாக உள்ள கணவன் , மகன் , மருமகனை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவா் வந்தவாசி டி.எஸ்.பி. ராஜூவிடம் மனு அளித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவா் சந்திரசேகா் . கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள், இவா்களுக்கு மகள் தெய்வானை , மகன்கள் ராமன் , லட்சுமணன் ஆகியோா் உள்ளனா் . தெய்வானைக்கு திருமணமாகிவிட்டது . இவரது கணவா் ராமகிருஷ்ணன்.
இந்த நிலையில், வந்தவாசி டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு தனது உறவினா்களுடன் வந்த காளியம்மாள் டி.எஸ்.பி. ராஜூவிடம் மனு அளித்தாா்.
அந்த மனுவில் நாங்கள் ஒட்டா் சமுதாயத்தைச் சேர்ந்தவா்கள் . எனது கணவா் சந்திரசேகா் , மகன் ராமன் , மருமகன் ராமகிருஷ்ணன் ஆகியோா் ஆந்திர மாநிலம் , சித்தூரை அடுத்த மதனபள்ளியில் உள்ள வேணு என்பவரின் கல்குவாரியில் கடந்த ஓராண்டாக கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தெய்வானைக்கு போன் செய்த ராமகிருஷ்ணன் , கல்குவாரி உரிமையாளா் வேணு எங்கள் 3 பேரையும் கொத்தடிமைகளாக வைத்துள்ளாா் , தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறாா் , ரூ.ஒரு லட்சம் தந்தால் மட்டுமே விடுவிப்பதாகக் கூறுகிறாா் என்றும் தெரிவித்தாா்.
எனவே சந்திரசேகா் , ராமன் , ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் மீட்டுத் தரும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் காளியம்மாள் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி. ராஜூ அவா்களிடம் உறுதியளித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu