வந்தவாசி அருகே ஊராட்சி மன்ற நிதி முறைகேடு: வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

வந்தவாசி அருகே ஊராட்சி மன்ற நிதி முறைகேடு: வார்டு உறுப்பினர்கள் போராட்டம்
X
வந்தவாசி அருகே பிருதூர் ஊராட்சி மன்ற நிதியில் முறைகேடு செய்ததை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பிருதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரது தந்தை செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

ராஜேஸ்வரியின் தந்தை நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், ஊராட்சி மன்ற நிதியை முறைகேடு செய்வதாகவும் கூறி 5, 6-வது வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக முகத்தில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, முறைகேடு குறித்து ஆதாரத்துடன் முறையிட்டால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture