ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
மழைநீரை வெளியேற்றக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் சமீத்தில் பெய்த மழையால் மழைநீர் தேங்கி, அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து புகுந்தது. மழை நீரை வெளியேற்ற கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை, எனக் கூறப்படுகிறது.
எனவே, நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, வந்தவாசி-திண்டிவனம் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ரவி, குப்புசாமி ஆகியோரும் நேரில் வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
கிராமத்தில் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் இன்று பகல் 10 மணியில் இருந்து 11 மணிவரை ஒரு மணிநேரம் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu