லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
X

லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

வந்தவாசி அருகே ஊருக்குள் வேகமாக சென்ற லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல்நர்மா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் இருந்து கருங்கல் ஜல்லிகள், எம்.சாண்ட் ஏற்றிய லாரிகள் வாச்சனூர், ஆலத்தூர், வெங்கோடு வழியாக 20க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகிறது.

ஒரு வழிப்பாதையாக உள்ள இந்த சாலையில் வரும் லாரிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடாமலும், கிராமங்களுக்கு உள்ளே செல்லும்போது அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களை அச்சுறுத்தி செல்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்த ஜல்லி லாரிகள் அதி வேகமாக வந்ததோடு மட்டுமல்லாது, அவ்வழியாக வந்த அரசு பஸ்சுக்கு வழிவிடாமல் நடுரோட்டில் நின்று உள்ளது. இதனை அரசு பேருந்து ஓட்டுனர் தட்டி கேட்டபோது, அவரை லாரி டிரைவர்கள் மிரட்டியுள்ளனர் . இதனை கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து லாரிகளை சிறை பிடித்தனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி செல்லும் விதத்தில் லாரியை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள், லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil