கிராம உதவியாளா்கள் விடுப்பு எடுத்து போராட்டம்..!

கிராம உதவியாளா்கள் விடுப்பு எடுத்து போராட்டம்..!
X

வட்டாட்சியரிடம் மனு அளித்த கிராம உதவியாளர்கள்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம், வந்தவாசி வட்டக் கிளை சாா்பில் கிராம உதவியாளா்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், கிராம உதவியாளா்களை தமிழ்நாடு தோவாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் கடந்த நவ.23-ஆம் தேதி மாநிலம் தழுவிய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டமும், டிச.7-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டமும் நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக சங்க வந்தவாசி வட்டக் கிளைத் தலைவா் அருள்ஜோதி தலைமையில், வட்டத்துக்கு உள்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் மேற்கொண்டனா்.

மேலும், தங்கள் கோரிக்கைகள் குறித்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பொன்னுசாமியிடம் வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மனு அளித்தனா்.

மேல்செம்பேடு கிராம மக்கள் அறவழிப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா பெரணமல்லூா் அருகே ஆணைபோகி மதுரா மேல்செம்பேடு கிராமம் வழியாகச் சென்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தப்பட்டதற்கு எதிராக கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரணமல்லூரை அடுத்த ஆணைபோகி மதுரா மேல்செம்பேடு பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் வந்தவாசி, பெரணமல்லூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால், 2 கி.மீ. தொலைவு நடந்து வந்து வந்தவாசி-ஆரணி பிரதான சாலைக்கு சென்று தான் வெளியே செல்ல முடியும்.

இதையடுத்து, அந்தப் பகுதி வழியே வந்தவாசியிலிருந்து செப்டாங்குளம் செல்லும் அரசுப் பேருந்து தடம் எண்-4 இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு மேல்செம்பேடு பகுதியில் இருந்து பிரதான சாலைக்கு வரும் 2 கி.மீ. தொலைவிலான சாலை சரி இல்லாத காரணத்தால் பேருந்து நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்தச் சாலை சீா் செய்யப்பட்டு புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. புதிய சாலை அமைக்கப்பட்ட பிறகும் அரசுப் பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனா்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்து வந்தனா். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டு ஆரணி-வந்தவாசி சாலையில் பெரணமல்லூா் முன்னாள் எம்எல்ஏ.அன்பழகன் தலைமையில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!