வந்தவாசியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

வந்தவாசியில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வந்தவாசியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வந்தவாசியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வந்தவாசி தேரடியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ராஜா, சேவாபாரதி நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி