வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
X

வந்தவாசியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

ஓமலூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து வந்தவாசியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூரில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இனியவன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.

இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!