வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

பழங்குடியின மாணவர் தீயில் தள்ளப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடியின மாணவர் தீயில் தள்ளப்பட்டதை கண்டித்து, வந்தவாசி அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளார் பஸ் நிறுத்தம் அருகில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வந்தவாசி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் எம்.கே.மேத்தாரமேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த காட்டுசிவிரி கிராமத்தில் பழங்குடியின மாணவர் தீயில் தள்ளப்பட்டதை கண்டித்தும், தீயில் தள்ளிய மாணவர்களை கைது செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதில் நகர செயலாளர் இனியவன், தொகுதி அமைப்பாளர் அன்பரசு, ஒன்றிய செயலர் ஞானப்பிரகாசம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!