/* */

நீட் தேர்வில் 4 வது இடம் பிடித்த வந்தவாசி மாணவி

மருத்துவ தரவரிசை பட்டியலில் வந்தவாசி மாணவி 4-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

HIGHLIGHTS

நீட் தேர்வில் 4 வது இடம் பிடித்த  வந்தவாசி  மாணவி
X

பெற்றோருடன் மாணவி ரோஜா

மருத்துவ தரவரிசை பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மாணவி 4-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவி நீட் தேர்வில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்சா தேவி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3-வது மகள் ரோஜா.

இவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துவிட்டு, திருவண்ணாமலை சண்முகா அரசு மாடல் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார்.

ரோஜாவிற்கு மருத்துவராக வேண்டும் என்று சிறுவயதில் முதல் ஆசை இருந்து வந்த நிலையில், தன்னுடைய கடுமையான படிப்பு மூலம் இரவும் பகலமாக படித்து வந்த ரோஜாவிற்கு நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தது,

அப்போது 12 நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் நீட் தேர்வு எழுத முடியவில்லை.

மேலும், மனம் தளராத ரோஜா மீண்டும் முயற்சி செய்து நீட் தேர்வு எழுத முடிவெடுத்தார். அப்போது நீட் தேர்வு எழுதுவதற்கு ரோஜா இரவும் பகலும் ஆக கடுமையாக படித்து தன்னுடைய வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீட் தேர்வு எழுதினார். இதில் ரோஜாவிற்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது நீட் தேர்வில் 544 மதிப்பெண்கள் பெற்று 7.5 இட ஒதுக்கீட்டில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மருத்துவராகி பின் தங்கிய கிராமமாகிய அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக சேவை செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ரோஜாவிற்கு கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 17 July 2023 1:12 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  2. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  5. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  6. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  10. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!