வந்தவாசி ஒன்றியத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

வந்தவாசி ஒன்றியத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
X

மருத்துவ பெட்டகங்களை வழங்கினார் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் தலைமை வகித்தாா். அத்திப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கருணாகரன் முன்னிலை வகித்தாா். மருந்தாளுநா் ரமேஷ்பாபு வரவேற்றாா்.

வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. அம்பேத்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.

வட்டார மருத்துவ அலுவலா் ஆனந்தன், வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தரணீஸ்வரன் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

முகாமில், பொது மருத்துவம், குழந்தை நலம், பல் மருத்துவம், கண் பரிசோதனை, சா்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தொடா்பாக 1,050 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், 75 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 250 பேருக்கு மக்களைத் தேடி மருத்துவப் பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன. சுகாதார ஆய்வாளா் சீதாபதி நன்றி கூறினாா்.

அதனைத் தொடர்ந்து வந்தவாசியில் பாய் வியாபாரிகள் சங்க கட்டிடத்திற்கு ரூபாய் 50,000 நிதி உதவித் தொகையை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

வந்தவாசியில் காயிதே மில்லத் கோரை பாய் வியாபாரிகள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அரசு மருத்துவமனை பின்பகுதியில் நடந்து வரும் இந்த கட்டிட பணிக்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தனது சொந்த பணத்தில் ரூபாய் 50 ஆயிரத்தை சங்கத் தலைவர் ராஜா பாட்ஷாவிடம் வழங்கினார்.

அப்போது நகராட்சி தலைவர் ஜலால், நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான், கிஷோர் குமார், திமுக அவைத் தலைவர் நவாப் ஜான், சங்க செயலாளர், திமுக கிளை செயலாளர்கள் ,ஆலோசகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!