வந்தவாசி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: கூடுதல் ஆட்சியர் ஆய்வு

வந்தவாசி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: கூடுதல் ஆட்சியர் ஆய்வு
X

வந்தவாசி ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர்  பிரதாப்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியரும் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலருமான பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 51.64 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் , சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அந்த ஊராட்சியில் பழங்குடியினருக்கான 23 பசுமை வீடுகள் கட்டும் பணியையும் அவர் பார்வையிட்டார்.

தாழம்பள்ளம் கிராமத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக அவர் ஆய்வு மேற்கொண்டார். 3.23 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூர்த்தி, குப்புசாமி , ஒன்றிய பொறியாளர் ரவி, ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்