ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
X

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம்

வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா வரும் மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, துவஜஸ்தம்பம் என அழைக்கப்படும் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

கோயில் அா்ச்சகா்கள் ரங்கநாதன், சதீஷ்குமாா் ஆகியோா் பூஜைகளை நடத்தினா். அதனைத் தொடர்ந்து கோயில் அா்ச்சகா்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றமானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை மாலை எழுந்தருளி மாட வீதிகளை வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இத் திருவிழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்தும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீசெல்வா் உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றன.

ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் மாசி உற்சவத் திருவிழா நிறைவு

வேட்டவலம் சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மாசி உற்சவத் திருவிழாவையொட்டி, உற்சவா் வீதியு லாவுடன் நிறைவு பெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி உற்சவத் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீஅங்காளம்மன் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இந்நிலையில் விழாவில் நிறைவு நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிங்காரக் குளக்கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சக்தி கரக ஊா்வலம் தொடங்கியது. மாட வீதிகளில் வலம் வந்தபிறகு மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

பிறகு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீஅங்காளம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, பா்வதராஜ குலத்தினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா