வந்தவாசி அருகே பச்சையம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

வந்தவாசி அருகே பச்சையம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
X

பூட்டு உடைக்கப்பட்ட உண்டியல்.

வந்தவாசி பச்சையம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அருங்குணம் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார்.

பூசாரி, பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கோவிலை திறக்க சென்ற போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதும், கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture