பெட்ரோல் கேஸ் விலை உ.யர்வைக்கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் கேஸ் விலை உ.யர்வைக்கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல்டீசல் கேஸ் விலை உயர்வைக்கண்டித்து வந்தவாசியில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக்கண்டித்து வந்தவாசியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்துக் கோஷம் எழுப்பினர்.

அதில் ஒருவர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி, மாலையாகக் கட்டி கழுத்தில் அணிந்து கொண்டார். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பட்டை நாமம் போட்டு சைக்கிள் மீது வைத்திருந்தனர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் யூனிஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!