வந்தவாசி அருகே காரில் குட்கா பொருட்கள் கடத்திய இரண்டு பேர் கைது

வந்தவாசி அருகே காரில் குட்கா பொருட்கள் கடத்திய இரண்டு பேர் கைது
X

குட்கா பொருட்கள் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார்.

வந்தவாசி அருகே காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். . இதுதொடா்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

தெள்ளாா் காவல் நிலைய ஆய்வாளா் ரேகாமதி தலைமையிலான போலீஸாா் வந்தவாசி-தேசூா் சாலையில் அகரகொரக்கோட்டை கிராமம் அருகே காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் காரில் வந்த வந்தவாசி சீதாராம் நாயுடு தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோந்த ஹரீஷ் குமாா் , உமேஷ் குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், இருவரும் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களை வந்தவாசிக்கு காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

5 பேருக்கு அபராதம்

செய்யாற்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 5 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா்கள் ராஜவேல், சரவணன், காா்த்தி, அருணாசலம், தீனா ஆகியோா் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாராயம் பதுக்கிய வாலிபர் கைது

கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் கண்ணமங்கலம் அருகே இரும்பிலி செல்லியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு லாரி டியூப்பில் சாராயம் பதுக்கிய வேலூர் மருதவ லிமேடு பகுதியை சேர்ந்த கோபி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!