வந்தவாசி: டயர் வெடித்ததால் கரும்பு பாரத்துடன் டிராக்டர் கவிழ்ந்து விபத்து

வந்தவாசி: டயர் வெடித்ததால் கரும்பு பாரத்துடன் டிராக்டர் கவிழ்ந்து விபத்து
X

 டயர் வெடித்ததால் கரும்பு பாரத்துடன் கவிழ்ந்த டிராக்டர் 

வந்தவாசி அருகே டயர் வெடித்ததால் கரும்பு பாரத்துடன் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வந்தவாசியை அடுத்த சோகத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து கரும்புகளை ஒரு டிராக்டரில் ஏற்றிக் கொண்டு டிரைவர் சுரேஷ் என்பவர், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்து கொண்டிருந்தார். வந்தவாசி 5 கண் பாலம் அருகே சேத்துப்பட்டு சாலையில் திரும்பும் போது, கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய டிராக்டர், கரும்பு பாரத்துடன் கவிழ்ந்தது.

டிராக்டர் வளைவில் திரும்பும்போது டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்த வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்து கரும்பு ஏற்றி வந்த டிராக்டரை அப்புறப்படுத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!