மின்கம்பத்தில் மோதிய லாரி: தீப்பிடித்து எரிந்த ரேஷன் பொருட்கள்
மின்கம்பத்தில் லாரி மோதி மின்கம்பம் லாரியின் மீது சாய்ந்தது
லாரி டிரைவர் சுப்பிரமணி என்பவர் வந்தவாசி சிவில் சப்ளை குடோனில் இருந்து 11 டன் ரேசன் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தார். வந்தவாசி தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்களை இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரக் கம்பத்தின் மீது மோதியது. இதனால் மின்சார கம்பம் 2 துண்டாக உடைந்தது.
மேலும் மின்சாரம் உரசியதில் தீப்பொறி எழுந்து லாரியில் இருந்த அரிசி சர்க்கரை மூட்டைகள் மீது பட்டதில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வந்தவாசி தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் அதிக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடக் கூடிய இந்த இடத்தில் மின்சாரக் கம்பத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அவ்வழியாக எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu