வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை

வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை
X

வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார். 

கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், கீழ்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடந்தது.

முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாகுமார் தலைமை வகித்தார். வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார்.

சுகாதார ஆய்வாளர் லீலாவிநோதன் வரவேற்றார். கர்ப்பிணிகள் 20 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 50 பேருக்கு மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். கீழ்கொடுங்காலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஷோபா மற்றும் மத்துவக் குழுவினர் 1056 பேருக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் வந்தவாசி வட்டாரக் குழந்தைகள் நலத் திட்ட அலுவலர் மரியம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர் மகாலட்சுமி ராமச்சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் கே.ஆர்.பழனி, தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future