திருவண்ணாமலை: மாணவா் சேர்க்கை விழிப்புணா்வு வாகன பிரசாரம்

திருவண்ணாமலை: மாணவா் சேர்க்கை விழிப்புணா்வு வாகன பிரசாரம்
X

மாணவா் சோக்கை விழிப்புணா்வு வாகன பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி கடந்த 19-ஆம் தேதி வாகன பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வாகன மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி கடந்த 19-ஆம் தேதி வாகன பிரசாரத்தை தொடங்கிவைத்தாா்.

இந்த நிலையில், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பேரூராட்சித் தலைவா் வேணி ஏழுமலை பிரசார வாகனத்தை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன் தலைமை வகித்தாா்.

கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியை இந்திரா வரவேற்றாா்.

இந்த வாகனம் மூலம் பெரணமல்லூா் நகரின் முக்கிய வீதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் செய்யப்படவுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் புவனேஸ்வரி நன்றி கூறினாா்.

சேத்துப்பட்டு

தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தேசூர் பேரூராட்சியில் உள்ள பாடசாலை தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் என் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு, மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு இலவச தமிழ் கல்வி ஆங்கில கல்வி வழங்குவதைப் பற்றியும் சிறப்பான முறையில் கல்வி கற்போம் என்ற வாசகத்துடன் மாணவர் சேர்க்கை ஊர்வலம் அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. அரசு பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகம், நோட்டு, பேனா, ஸ்கூல் பேக், தினமும் காலை உணவு, மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டு அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, சரஸ்வதி, திவ்யா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் துர்கா, லதா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!