அரசு பஸ் டிரைவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

அரசு பஸ் டிரைவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஓரத்தி கிராமத்திற்கு அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ் டிரைவராக அல்லாபக்ஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். பஸ்சில் மழுவங்கரனை கிராமத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பள்ளி மாணவிகள் வந்தவாசி அரசு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். டிரைவர் அல்லாபக்ஸ் பஸ்சில் பயணம் செய்யும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.

இதனை மாணவிகள் அழுது கொண்டு வீட்டில் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மழுவங்கரணை கிராமம் வழியாக சென்ற அரசு பஸ் வழிமடக்கி சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்த டிரைவர் அல்லாபக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போக்சோ சட்டத்தில் கைது

மாணவி 4 மாத கர்ப்பம் ஆனதால் போக்சோ சட்டத்தில் எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.

ஆரணி பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஆரணி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். எலக்ட்ரீசியன் வேலை செய்யும் ஜெகன் (21) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்து செல்வார்.

கடந்த டிசம்பர் மாதம் ஆசைவார்த்தை கூறி ஜெகன் மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவிக்கு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றபோது அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் தாக்கி இறப்பு

திருவண்ணாமலை ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 32). இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அபய மண்டபம் அருகில் உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு பழுது ஏற்பட்டு உள்ளதாக அலுவலகத்திற்கு போன் வந்தது.

பின்னர் அந்த வீட்டின் மின் இணைப்பை சரி செய்ய ரவி அந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!