திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 123 கவுன்சிலர்கள் பதவியேற்றனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 123 கவுன்சிலர்கள் பதவியேற்றனர்
X

திருவண்ணாமலை நகராட்சி உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவின் போது அனைத்து அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 123 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில், தி.மு.க. 31 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கி, 39 கவுன்சிலர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., தி.மு.க. மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார் உள்பட நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி நகராட்சியில் உளள 33 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 17 இடங்களிலும், அ.தி.மு.க. 15 இடங்களிலும் மற்றும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திறந்த வெளியில் கவுன்சிலர்கள் பதவிேயற்பு விழா ஆணையாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. அலுவலக மேலாளர் நெடுமாறன் வரவேற்றார். விழாவில் 33 கவுன்சிலர்களுக்கும், நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

வந்தவாசி

வந்தவாசி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் சுயேச்சைகள் 10 இடங்களிலும், தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, 24 கவுன்சிலர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்றுக்கொண்ட அனைவருக்கும், அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

திருவத்திபுரம்

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் ரகுராமன், கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.ஜோதி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!