/* */

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்

வந்தவாசியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்
X

பைல் படம்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31-ந் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் முடங்கிப் போயிருந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்களின் தொழில் தற்போது மீண்டும் துளிர் விட தொடங்கி உள்ளது.

மச்ச விநாயகர், தேசியக்கொடியுடன் கூடிய விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குழந்தை விநாயகர், சிவன் பார்வதி விநாயகர், கஜபுஜ விநாயகர் , 5 முக விநாயகர், விஷ்ணு விநாயகர் உள்ளிட்ட 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகிறது. இந்த சிலைகள் ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.

வந்தவாசி தாலுகாவில் முக்கிய பகுதிகளான தெள்ளார், கீழ்கொடுங்காலூர், மருதாடு, கீழ்கொவளைவேடு, மழையூர், தென்னாங்கூர் மற்றும் வந்தவாசி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் விநாயகர் சிலைகள் வாங்க ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல் போளூர் நகரில் சுமார் 40 இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபடவும், சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 160 விநாயகர் சிலை அமைத்து வழிபடவும் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தலின்படி தண்ணீரில் எளிதாக கரைக்கும் வகையிலும் தண்ணீர் மாசு படாமல் இருக்க பேப்பர் கூழ் கொண்டு சிற்பக் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.

Updated On: 28 Aug 2022 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க