அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவருக்கு கிராமமே சொந்தம் கொண்டாடி இறுதி மரியாதை

அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவருக்கு கிராமமே சொந்தம் கொண்டாடி இறுதி மரியாதை
X

முதியவருக்கு இறுதி மரியாதை செய்த கிராமத்தினர்

அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவருக்கு கிராமமே திரண்டு அஞ்சலி செலுத்தி உடலை அடக்கம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

அனாதையாக வாழ்ந்து இறந்த முதியவர் உடலுக்கு கிராமமே திரண்டு அஞ்சலி செலுத்தி உடலை அடக்கம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனாதையாக ஆதரவு தேடி வந்த ஒருவலர் வந்தார். அந்த கிராமத்தைச் சார்ந்த நபர்களே அவருக்கு சபரிமுத்து என பெயர் வைத்து உதவி வந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினரும் அவருக்கு உணவு வழங்கி ஆதரித்து வந்தனர்.50 ஆண்டாக அவரை கிராம மக்கள் எந்த குறையும் இன்றி கவனித்துக்கொண்டனர்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவால் இருந்த சபரி முத்துவை செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதித்து ஊர் மக்கள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். நேற்று சபரிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார் . முதியவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.

அனாதையாக வந்த நபருக்கு மாம்பட்டு கிராமமே ஒன்றிணைந்து ஊர்வலமாக கொண்டு சென்று இன்று அடக்கம் செய்தனர்.அனாதையாக வந்த சபரிமுத்துக்கு 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு பெண்கள் கண்ணீர் சிந்தியும் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story