வெண்குன்றம் மலையில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் கண்காணிப்பு

சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்.
வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் சமூக விரோதிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் போலீசா ர் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வந்தவாசியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் 1500 அடி உயரமுள்ள தவளகிரி மலையில் தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். பவுர்ணமி அன்று பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவர்.
இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்தனர். அப்போதிலிருந்தே பக்தர்கள் இந்த மலையைக் காக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்
மேலும் தற்போது இந்த மலையில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மலையின் அடிவாரத்தில் காவல்துறை அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களை தீவிரமாக சோதனை செய்து, அவர்களுடைய முழு விலாசத்தை பெற்றுக் கொண்ட பிறகு தான் மலைக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர்.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகில் உள்ள பர்வத மலைக்கு செல்ல ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என போலீசார் அறிவித்திருந்தனர்.
அங்கும் காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பிறகு பக்தர்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கார்த்திகை தீபத்தன்று இக்கோயில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்கின்ற காரணத்தினால் போலீசார் மிக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu