வீடு புகுந்து திருட முயற்சித்த நபர் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு

வீடு புகுந்து திருட முயற்சித்த நபர்  கிணற்றில் குதித்ததால் பரபரப்பு
X
வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயன்று தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டு கம்பத்தில்கட்டி வைத்தனர்.

வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயன்று தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டு கம்பத்தில் கட்டி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் . விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

நேற்று இரவு சேகர் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கோடை காலம் என்பதால் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துள்ளனர்.

இநத நிலையில் நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் சேகர் குடும்பத்தினர் வெளியே வந்தபோது பின்பக்கம் வழியாக ஒருவன் உள்ளே வீட்டினுள் வந்ததை பார்த்து கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்களை கண்டதும் திருட வந்த வாலிபர் தப்பி ஓடினான்.

பொதுமக்கள் அவனை விரட்டி சென்றனர். அப்போது திருடன் அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தான்.

துரத்திச் சென்ற பொதுமக்கள் கிணற்றில் இருந்த அந்தநபரை மீட்டு கம்பத்தில் கட்டி வைத்து கீழகொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவரை விடுவித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் என்பதும் நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த பச்சையப்பன் ஸ்ரீ ரங்கராஜபுரம் கிராமத்தில் நகையை திருடிவிட்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஆடுகள் சத்தம் எழுப்பியதால் பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்தது.

பச்சையப்பன் மீது சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பச்சையப்பனை கைது செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business