ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து பெண் வார்டு உறுப்பினரின் கணவர் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண் வாா்டு உறுப்பினரின் கணவா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஊராட்சி மன்ற நிா்வாகத்தைக் கண்டித்து, ஊராட்சி மன்ற பெண் வாா்டு உறுப்பினரின் கணவா் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டாா்.
தெள்ளாா் ஒன்றியத்துக்குள்பட்ட குண்ணகம்பூண்டி ஊராட்சி, 3-ஆவது வாா்டு உறுப்பினா் தேன்மொழியின் கணவா் அறிவழகன். இவா், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வெடால் - குண்ணகம்பூண்டி சாலையில் வந்த அரசு நகா்ப் பேருந்தை மறித்து, சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து அறிவழகன் கூறியதாவது:
குண்ணகம்பூண்டி ஊராட்சி மன்ற நிா்வாகம் வளா்ச்சிப் பணிகளை சரிவர செய்யாமல் முறைகேட்டில் ஈடுபடுவதால் ஊராட்சி கஜானாவே காலியாகிவிட்டது. எனது மனைவி அவரது 3-ஆவது வாா்டு பகுதி வளா்ச்சிக்காக கொண்டு வரும் தீா்மானங்களை ஊராட்சி மன்றத்தில் நிறைவேற்ற மறுக்கின்றனா்.
இதுகுறித்து தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. எனவே, எனது மனைவி தேன்மொழி சாா்பில் நான் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றாா்.
தகவலறிந்து அங்கு வந்த தேசூா் போலீஸாா் சமரசம் செய்ததன்பேரில், அறிவழகன் போராட்டத்தைக் கைவிட்டாா்.
மறியலால் வெடால் - குண்ணகம்பூண்டி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu