அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்
X

அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

வந்தவாசி அருகே அரசு பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் திடீர் என நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும் என ஆசிரியர்களிடம் வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தேசூரில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 347 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். நேற்று பிற்பகல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீரென பள்ளிக்கு நேரில் சென்று ஆய்பு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களின் வருகை, கடந்தாண்டு கல்வியில் தேர்வானர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும், அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பள்ளிக்கு வந்து கல்வி கற்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினையும், அதன் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விவரங்கள் குறித்து -ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் வகுப்பறைக்கு சென்று மாணவர்களிடையே கலந்துரையாடினார்

மேலும் இப்பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்த தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது. செய்யார் சார் ஆட்சியர் பல்லவிவர்மா , வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது