தவில் வாசித்தும் காய்கறி வியாபாரம் செய்தும் வாக்கு சேகரித்த வேட்பாளர்

தவில் வாசித்தும் காய்கறி வியாபாரம் செய்தும்  வாக்கு சேகரித்த வேட்பாளர்

வாக்கு சேகரிப்பின் போது காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார்

ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தவில் வாசித்து வந்தவாசி எம்எல்ஏ காய்கறி வியாபாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்கள்

ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தவில் வாசித்து வந்தவாசி எம்எல்ஏ காய்கறி வியாபாரம் செய்தும் வாக்கு சேகரித்தார்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேத்துப்பட்டு ஒன்றியம் பெரணம்பாக்கம், மட்டபிறையூா் ஆத்துரை, சித்தாத்துரை, மன்சுராபாத், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம் என பல்வேறு ஊராட்சிகளில் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தரணி வேந்தன், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்

தொடர்ந்து சேத்துப்பட்டு தாலுக்கா நம்பேடு கிராமத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தன் பிரச்சாரத்தின் போது தகவல் வாசித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தவில் வாசித்த வேட்பாளர் தரணி வேந்தன்

பிரச்சாரத்தின் போது அங்கிருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களிடம் வாக்கு சேகரித்த தரணி வேந்தன், நாதஸ்வர கலைஞர்கள் வைத்திருந்த தவிலை வாங்கி வாசித்து அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதனை அப்பகுதி மக்கள் ரசித்து வியப்புடன் பார்த்தனர்.

அதனைத் தொடர்ந்து பின்னர். பஜார் வீதியில் அங்கிருந்த கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இதை அடுத்து திமுக ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்த அவர் நாடாளுமன்றத் தேர்தலில் நமது சக்தியை நிரூபிக்கும் வகையில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுமாறும், நமது தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செய்துள்ள நலத்திட்டங்களையும் சாதனைகளையும் வாக்காளர்களுக்கு விளக்கி கூறி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

வந்தவாசி

ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

வந்தவாசி அடுத்த கரணை, தென் சேர்ந்தமங்கலம், சின்ன சேத்துப்பட்டு , மும்முனி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார் பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசினார்.

பின்னர் இரவு மும் முனி கிராமத்தில் நடைபெற்ற காய்கறி வார சந்தையில் காய்கறி விற்பனை செய்து திமுக வேட்பாளர் தரணி வேந்தனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி கூறி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு ஆதரவாக ஒன்றியக் குழுத் தலைவா் ராணிஅா்ச்சுனன், ஒன்றியச் செயலா்கள எழில்மாறன், மனோகரன், விளாயாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன் , கூட்டணி கட்சி நிர்வாகிகள், வந்தவாசி நகர மன்ற உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Next Story