வந்தவாசி நகர மன்ற கூட்டத்தில் எம்பி., எம்எல்ஏ.வுக்கு நன்றி
வந்தவாசி நகர மன்ற கூட்டம்
வந்தவாசி நகர மன்ற கூட்டத்தில் எம்பி மற்றும் எம்எல்ஏ விற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அடிப்படை வசதிகளை மேம்படுத்த தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கிய ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர்மன்ற கூட்டம், நகர் மன்ற கூட்ட அரங்கில் தலைவர் எச்.ஜலால் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கீதா முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில்,அடிப்படை வசதிகளை மேம்படுத்த 50 இலட்சம் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கிய ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நகர்மன்ற கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர் ராமஜெயம் பேசும்போது, புதிய பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏன் இதுவரை அமல் படுத்தப்படவில்லை எனவும்,
54 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு நடைபாதைகள் போடப்பட்ட அரசு பணிமனை எதிரில் உள்ள பூங்கா பணி முடிந்த பின்னும் ஏன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
நகர்மன்ற உறுப்பினர் நூர் முகம்மது பேசுகையில், பழைய பேருந்து நிலைய வளாகம் நகராட்சி குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமா என கேள்வி எழுப்பினார். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
கனகராமசாமி பிள்ளை தெரு, காஞ்சிபுரம் சாலை, மக்தும் மரைக்காயர் தெரு, விகேஎம் பாவா தெரு உள்ளிட்ட 5 தெருக்களின் கழிவுநீர் ஓடும் கால்வாய் தூர்வாரப்பட்டு சிலாப் பாதை அமைத்து தரவேண்டும். பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெரு நாய்களின் பெருக்கத்தைகட்டுப்படுத்த வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நகர்மன்ற தலைவர் எச். ஜலால், உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் . தெருநாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த கூட்டத்தில், நகராட்சி மேலாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், நகர்மன்ற உறுப்பினர்கள் கிஷோர் குமார், ராமஜெயம், மகேந்திரன், நூர் முகம்மது,அசீனா உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu