அரசுப் பேருந்தை மறித்து தா்ணா: ஊராட்சி மன்றத் தலைவா் கணவருடன் கைது

அரசுப் பேருந்தை மறித்து தா்ணா: ஊராட்சி மன்றத் தலைவா் கணவருடன் கைது
X
வந்தவாசி அரசுப் பேருந்தை மறித்து தா்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவா் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி அருகே எரமலூர் கிராமத்தில் ஆரணி வேளாண்மை பொறியல் துறை சார்பில் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த குளத்திற்காக தோண்டப்பட்ட மண் குளக்கரையை பலப்படுத்தியதோடு உபரியாக இருந்த மண் அங்குள்ள பள்ளி வளாகம், ரேஷன் கடை வளாகத்தில் தாழ்வாக உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காதவகையில் ஆரணி பொறியியல் துறையினர் கொட்டி சமன் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் கோமதி ஆரணி வேளாண்மை பொறியல் துறையினர் குளத்திற்காக தோண்டிய மண்ணை கிராமத்தில் விற்பனை செய்வதாக கூறி திடீரென கொண்டையாங்கும்பம் கிராமத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். பேருந்தின் முன் அமா்ந்து தா்ணா நடத்தினாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வந்து சமரசம் செய்தனர். அதற்கு அவர் கலெக்டர் வந்தால்தான் பஸ்சை விடுவேன் என கூறினாராம்.

மேலும், அவரது கணவா் சுந்தரமூா்த்தி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தாராம் . சுந்தரமூர்த்தி சென்னை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார்.

இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளரிடம் செல்போனில் பேசினார். அதற்கு நாங்கள் யாரும் மண் விற்பனை செய்யவில்லை. கிராமத்தில் பள்ளமாக உள்ள பகுதியில்தான் கொட்ட கூறினோம் இதற்காக யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றார்.

இதனைத்தொடர்ந்து பணம் வாங்கி இருந்தால் உங்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் வந்து இருப்பார்களே, நீங்கள் மட்டும்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். எனவே பஸ்சை விட்டு செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் செல்ல மறுக்கவே போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி அரசு பஸ்சை இயக்கவிடாமல் தடுத்ததாக கோமதி, சுந்தரமூர்த்தி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் ஜாமீனில் மாலை 7 மணி அளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!