அரசியல் கட்சிகளுக்கு பாடம் கற்பித்த வந்தவாசி நகர மன்றத் தேர்தல்
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி சட்டமன்ற தேர்தலில் திமுக பலமுறை வெற்றி பெற்ற தொகுதியாகும். திமுகவினரால் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை வந்தவாசி திமுகவின் கோட்டை என்பதாகும் .
அப்படி இருந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற கனவில் இருந்த திமுகவினருக்கு, வந்தவாசி நகர மக்கள் முதல் எச்சரிக்கை மணியை இந்த தேர்தல் மூலம் அளித்துள்ளனர். மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வென்றது.
திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் தோல்வியைத் தழுவின. மக்களின் கோபத்திற்கான காரணம், தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை செயல்படுத்த முன் வராததும், அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல் விஷயத்தில் மிகவும் அலட்சியத்தோடு நடந்து கொள்வதையும், வந்தவாசி தொகுதி மற்றும் நகரின் வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றத்திற்கான சிறு முயற்சிகளை மேற்கொள்ளாதது ஆகியவையே காரணம்.
அதன் வெளிப்பாடே திமுக அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிகமான இடங்களில் தோல்வியை தழுவினர்.
அதேபோல் அதிமுகவும் பெரிய வெற்றியை இந்தத் தேர்தல் பெற முடியவில்லை. 3 வார்டுகளில் மட்டுமே வென்றது. இரு கழகத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததாக தெரிகிறது. அதேபோல் உட்கட்சி பூசல் இரு கட்சிகளிலும் மிக அதிகமாக காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக இந்த தேர்தலில் பத்து சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் பலரை கட்சியில் இணைத்து நகரமன்ற தலைவர் பதவியையும் துணைத் தலைவர் பதவியும் திமுக தன்வசப்படுத்திக் கொண்டாலும், இத் தேர்தல் குறித்து திமுக தலைமை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மூத்த திமுக உறுப்பினர்கள் கூறுகின்றனர்
ஆரணியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளையும், தேர்தல் நேரத்தில் கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளையும் திமுக நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான அத்தனை முயற்சிகளையும் எம்எல்ஏ அம்பேத்குமார், அமைச்சர் வேலுவுடன் கலந்து ஆலோசனை செய்து வந்தவாசி தொகுதியில் வளர்ச்சி குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu