வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா

வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா
X

அஙகாள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா நடைபெற்றது.

பெரணமல்லூரில் உள்ள அஙகாள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா நடைபெற்றது.

பெரணமல்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையன்று ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதனையொட்டி காலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் பாம்பு புற்றுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 6 மணி அளவில் பூ கரகம் ஜோடித்தும், சூரிய குளம்படிக்கட்டு் அருகே 16 கைகளுடன் உள்ள காளி தேவதைக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

அப்போது பலர் அருள் வந்து ஆடினர். ஏற்கனவே ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் வேண்டிக்கொண்டு சென்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை காசுகள் வைத்து துலாபாரம் செய்து நேர்த்திக்கடன் செலுதினர். பின்னர் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு பூரணகும்பம் படையல் செய்து அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை அமாவாசை விழாக்குழுவினர் செய்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!