கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்: விவசாயிகள் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்:  விவசாயிகள் கோரிக்கை
X
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவற்றப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநாடு, சங்க தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசலுடன் 50 சதவீத எத்தனால் கலந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி நாட்டு சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்துவிட்டு உள்நாட்டு சர்க்கரை விலையை குறைக்கக் கூடாது. 2021 அரவை பருவத்திற்கான பணத்தை உடனே வழங்க வேண்டும்.

கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும், கரும்பு வெட்டுவதற்கு ஆட்களை ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யவேண்டும், அரவை பருவம் தொடங்குவதற்கு முன்பாக முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பலராமன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india