வஉசி வரலாற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவ மாணவிகள்

வஉசி வரலாற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவ மாணவிகள்
X

சதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாணவ மாணவிகள் அர்வமுடன் பார்வையிட்டனர்.

வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி வாகனம், வந்தவாசி அரசு பள்ளிக்கு வந்தது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

வந்தவாசி அரசு பள்ளிக்கு வந்த சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி உள்ளடக்கிய வாகனம், நேற்று வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தது. தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடந்த வாகன கண்காட்சியில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற வகையில் புகைப்படங்களும் குறிப்புகளும் அமைந்திருந்தது.

வாகனத்திற்குள் வ.உ.சிதம்பரனாரின் உருவச்சிலை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மலர் தூவி மாலை அணிவித்தார். கண்காட்சி வாகனத்தை வந்தவாசி தாலுகாவில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அவர்கள் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். அப்போது உதவி தலைமைஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் முத்தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!