ஸ்ரீ கோதண்டராமர் கோயில் வருஷாபிஷேக விழா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகோதண்ட ராமசுவாமி
Kothandaramar Temple-திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பஜனை கோயில் திருவிழா அமைந்துள்ள ஸ்ரீ சீதா சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த விழா நடைபெற்றது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் ,நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஓமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து பூரண கும்ப கலசங்களுக்கு பூஜைக்கு செய்யப்பட்ட பின்னர் மூலவர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.
மூலவருக்கு வெள்ளிக் கவசங்கள் சாற்றப்பட்டு பாகவத கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடினர் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு பெருமாள் மாடவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கரிய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu