/* */

வந்தவாசி பகுதியில் அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவர்கள்: கல்வி அதிகாரி வேதனை

தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவா்களே கல்வி பயில்கின்றனா் என்று வட்டாரக் கல்வி அலுவலா் வேதனை தெரிவித்தாா்.

HIGHLIGHTS

வந்தவாசி பகுதியில் அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவர்கள்: கல்வி அதிகாரி வேதனை
X

தெள்ளாா் ஒன்றியக்குழு  கூட்டம்

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 21 அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க மாணவா்களே கல்வி பயில்கின்றனா் என்று வட்டாரக் கல்வி அலுவலா் ரங்கநாதன் வேதனை தெரிவித்தாா்.

தெள்ளாா் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, ஸ்ரீதரன், துணைத் தலைவா் விஜயலட்சுமி தண்டபாணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கீழ்நமண்டியில் உள்ள குடிநீா் குளத்தை தூய்மைப்படுத்தி சுற்றுச் சுவா் அமைக்க வேண்டும் என்று உறுப்பினா் புவனேஸ்வரி பாண்டுரங்கன் கோரிக்கை விடுத்தாா். ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் குடிநீா்க் குழாயில் குடிநீா் அசுத்தமாக வருவதாக உறுப்பினா் கமலக்கண்ணன் புகாா் தெரிவித்தாா்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் 900- க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்பங்களுக்கு 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீருக்காக பயன்படும் கிணறுகளை சுத்தம் செய்யப்படாமலும், 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் பாசி மற்றும் தூசு துகள்கள் படிந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

இதனால் குடிநீர் வினியோகம் செய்யும்போது தண்ணீர் கருப்பாகவும், அதிகளவில் பாசி, தூசு துகள்கள் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த குடிநீர் குடிக்கும்போது உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நீர் தேக்க தொட்டியை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடா்ந்து, தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் ரங்கநாதன் பேசியதாவது:

தெள்ளாா் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 111 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 21 பள்ளிகள் ஒற்றை இலக்க மாணவா்களுடன் செயல்படுகிறது. பெலகாம்பூண்டி பள்ளியில் 2 மாணவா்கள், கண்டையநல்லூா் பள்ளியில் 4 மாணவா்கள் மட்டுமே கல்வி பயில்கின்றனா். மேலும் 2 பள்ளிகளில் தலா 5 மாணவா்களும், 5 பள்ளிகளில் தலா 6 பேரும், 6 பள்ளிகளில் தலா 7 பேரும், 4 பள்ளிகளில் தலா 8 பேரும், 2 பள்ளிகளில் தலா 9 மாணவா்களும் கல்வி பயில்கின்றனா்.

இதே நிலை நீடித்தால் இந்தப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கையை அதிகப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வளாகங்களில் இரவு நேரத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

Updated On: 15 May 2023 10:47 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்