/* */

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த பிரம்ம சூத்திர சிவலிங்கம்

வந்தவாசி அருகே சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த சிவலிங்கத்தை, பொதுமக்கள் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த பிரம்ம சூத்திர சிவலிங்கம்
X

சாலை விரிவாக்க பணியின் போது கிடைத்த சிவலிங்கம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பணியாளர்கள் சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டினர். அப்போது வேப்பமரத்தடியில் மிகப்பெரிய சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் அந்த சிவலிங்கம் பிரம்ம சூத்திர குறியீடுடன் காணப்பட்டது. இந்த வகை சிவலிங்கம் மிகவும் பழமையானதாகவும் கூறப்படுகிறது. மேலும் 7-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து சிவலிங்கத்திற்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. மேலும் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு மருந்தீஸ்வரர் என பெயிரிட்டு பொதுமக்கள் வழிபட்டனர். இதையடுத்து அங்கு கோவில் கட்டப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அப்பகுதி சுற்றியுள்ள ஏராளமான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கூட்டுறவு வங்கியில் பொதுப் பேரவை கூட்டம்:

போளூர் காமராஜர் கூட்டுறவு நகர வங்கியில் பொது பேரவை கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி செயலாளர் சார் பதிவாளர் சித்திக் அலி தலைமை வகித்தார். பொது மேலாளர் ராமு முன்னிலை வகித்தார். காசாளர் மோகன் வரவேற்றார். உதவி பொது மேலாளர் கேசவன் தணிக்கை அறிக்கை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து துணை விதி திருத்தம், பணியாளர்கள் ஓய்வு வயது 58 இல் இருந்து 60ஆக உயர்த்துவது வங்கியின் உத்தேச வரவு செலவு திட்டம் புதிய அங்கத்தினர் சேர்ந்துள்ளதை அங்கீகரித்தல், என பல தீர்மானங்களை நிறைவேற்றினார். அங்கத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு பொது மேலாளர் ராமு தகுந்த பதில் அளித்தார். முடிவில் அங்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

14-வது வார்டு பகுதியில் குடிநீர் தொட்டிகள் திறப்பு:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் திறப்பு விழா நடந்தது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு உறுப்பினராக மணி இருந்து வருகிறார். இந்த வார்டில் அடங்கிய மேட்டுப்பாளையம், காசி நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், கோடை காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு வார்டு பகுதிகளில் மொத்தம் 10 இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிறு மின்விசையுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை தனது சொந்த செலவில் அமைத்திருந்தார்.

இதன் திறப்பு விழா கவுன்சிலர் மணி தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நகர தி.மு.க. செயலாளர் அன்பு கலந்துகொண்டு தி.மு.க கொடிகளை ஏற்றி வைத்து குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 14வது வார்டு பகுதி ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2023 10:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...