செய்யாறு சர்க்கரை ஆலை மூடல்: கரும்பு பயிரை டிராக்டா் மூலம் அழித்த விவசாயி
கரும்பை டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் வந்தவாசி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 12 ஏக்கர் கரும்பை விவசாயி டிராக்டர் ஓட்டி அழித்தது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வழூா் கிராமத்தைச் சோந்தவா் விவசாயி சக்கரபாணி.
இவர் கடந்த சில ஆண்டுகளாக சுமார் 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வந்தார். அதனை அறுவடை செய்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவை எந்திரம் வேலை செய்யாத காரணத்தால் சர்க்கரை ஆலை மூடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆலைக்கு கரும்பு பயிர் செய்த விவசாயிகள் கரும்பை அறுவடை செய்து அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இயந்திர பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்காததால், செஞ்சி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பை வெட்டி எடுத்துச் செல்லும்படி ஆலை அதிகாரிகள் இவரிடம் தெரிவித்தனராம்.
இதனால், சில தினங்களுக்கு முன்பு கரும்பு வெட்டுக் கூலியாள்களை வைத்து முதல் கட்டமாக 13 டன் கரும்பை வெட்டி செஞ்சி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு சக்கரபாணி அனுப்பிவைத்தாா்.
ஆனால், கரும்புக்காக ஆலையிலிருந்து பெறப்பட்ட தொகையை விட வெட்டுக் கூலிக்கு செலவு அதிகமானதால் வேதனை அடைந்தார்.
பின்னர் அவர் மீண்டும் கரும்பு பயிரிட்டார் அந்த பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்னும் அரவை தொடங்கவில்லை. இதனால் கரும்பை வெட்டி செஞ்சியில் உள்ள ஆலைக்கு அனுப்பினால் நஷ்டம் ஏற்படும். எனவே, கரும்பு பயிரை அழிக்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி விவசாயம் செய்த கரும்பை டிராக்டர் மூலம் அவர் அழித்து விட்டார். தான் ஆலைக்கு ஆட்களை வைத்து கரும்புவெட்டி அனுப்பினால் நஷ்டம் ஏற்படும் எனவும் இதனால் கரும்பு பயிர்களை வயலிலேயே அழித்து விட்டார்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
கூலி ஆள்களை வைத்து 13 டன் கரும்பை வெட்டி, செஞ்சி சா்க்கரை ஆலைக்கு அனுப்ப ரூ.48 ஆயிரத்து 800 செலவழித்தேன். ஆனால், ஆலையிலிருந்து எனக்கு வந்ததோ ரூ.39 ஆயிரம் மட்டுமே. மீதமுள்ள கரும்பையும் வெட்டி அனுப்பினால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
எனவே, டிராக்டரை வைத்து மீதமுள்ள கரும்பு பயிா்களை நிலத்திலேயே உழுது அழித்து விட்டேன்.
எனவே, விவசாயிகளின் வேதனையை இனியாவது புரிந்து கொண்டு ஆலை சீரான முறையில் இயங்க செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் விசாரித்த போது, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை 4 லட்சத்து 30 ஆயிரத்து 10 டன் கரும்புகளை அரவை செய்யும் திறன் வாய்ந்ததாகும். தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் டன் கரும்புகள் அரவை செய்யப்படுகிறது.
சர்க்கரை ஆலை பராமரிப்புக்காக ஒவ்வொரு வருடமும் அரவை நிறுத்தப்பட்டு ஆலை தற்காலிகமாக மூடப்படும். பராமரிப்பு முடிந்தவுடன் திறக்கப்பட்டு டிசம்பர் மாதம் ஆலையில் அரவை தொடங்கும்.
நாங்கள் சம்பந்தப்பட்ட விவசாயி சக்கரபாணியை 2 தினங்களுக்கு முன்பு கூட நேரில் சென்று சந்தித்து ஆலையில் அரவை தொடங்க உள்ள டிசம்பர் மாதம், முதல் வாரத்தில் கரும்புக்கு 'கட்டிங் ஆர்டர்' (அறுவடைக்கு அனுமதி) கொடுத்து விடுகிறோம் என்று கூறினோம்.
ஆனால் கரும்பு பயிர்களை அவர் அழித்து விட்டதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. அது குறித்து விசாரிக்க உள்ளோம். என தெரிவிதனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu