சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது..!
கோப்பு படம்
வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா், நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமியின் உடலில் சிறிது மாற்றங்கள் தெரியவே அவரது தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் ஜானகிராமன் என்பவர் தன்னுடன் பழகி கட்டாயப்படுத்தி பாலியல் கொடுமை செய்ததாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன பெற்றோர் போலீசில் புகார் செய்யலாம் என முடிவு செய்திருந்த நிலையில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அந்த சிறுமியை காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜானகிராமன் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.
ஜானகிராமனை தேடி வந்த போலீசார் அவரை கண்டுபிடித்து கைது செய்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் ஜானகிராமன் அந்த சிறுமியை புதுச்சேரிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனை அடுத்து சிறுமியை மீட்ட தெள்ளாா் போலீசார் ஜானகிராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமி செய்யாற்றில் உள்ள அரசு பெண்கள் தங்கும் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆரணியில் ஜேப்படி திருடர்கள் மூன்று பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி காலை இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சா்தாா் என்பவர் சென்னை செல்வதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை அபகரித்து சென்று விட்டனர்.
இது குறித்து சர்தார் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் ஆரணி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கைவரிசை காட்டும் ஜேப்படி போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் அதிக அளவில் வந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் காலை பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரேசன் தலைமையிலான போலீசார் அங்கு சந்தேகம் படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் , மங்கசமுத்திரம், சந்தப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ச நாகேந்திரன்,ராஜ்குமாா்,சூா்யா எனத் தெரிய வந்தது. மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சா்தாா்யிடம் இருந்து ரூ.27ஆயிரத்து 100 ஐ ஜேப்படி செய்தவா்கள் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்களிடம் இருந்து ரூ.10ஆயிரத்து 300ஐ போலீஸாா் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu