வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

வந்தவாசியில்  தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
X

கடை மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காந்தி ரோட்டில் கவுதம் என்பவரின் கடையிலும், பெட்டிநாயுடு தெருவில் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். சுப்பிரமணியனின் வீட்டிலும், கவுதமின் கடையிலும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், கரண்டிகள் ஆகிய பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4 டன் எடையிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!