முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் மறைவுக்கு பள்ளி மாணவர்கள் அஞ்சலி

முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் மறைவுக்கு  பள்ளி மாணவர்கள் அஞ்சலி
X

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பள்ளி மாணவர்கள்

முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் மறைவுக்கு திருவண்ணமாலை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்

குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் மறைவிற்கு திருவண்ணாமலைமலை, சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் கண்ணமங்கலத்தில் உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல், செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் ஆரணி அடுத்த பையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிபின் ராவத் உருவப் படத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், 13 பேரின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்