வந்தவாசியில் குறைந்த பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி

வந்தவாசியில் குறைந்த பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி
X

பைல் படம்

Govt Bus -வந்தவாசி பகுதியில் பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள், பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Govt Bus -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றியுள்ள 120-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக வந்தவாசி நகர்புற பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குறைந்த அரசு பஸ்கள் இயக்கப்படுகின்ற காரணத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இட நெருக்கடி காரணமாக பஸ் படிக்கட்டில் தொங்கி தங்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்ற அவலம் ஏற்படுகிறது.

மேலும் சில பயணகிகள் பஸ்சின் மேற்கூரையில் பயணிக்கின்றனர். மாலை பள்ளி கல்லூரி விடுகின்ற நேரத்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தவாசி சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு அதிகப்படியான வழித்தடங்களை குறிப்பிட்ட தடங்களில் இயக்கினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமபுற பகுதிகளுக்கு பல்வேறு வழித்தடங்களான வந்தவாசியிலிருந்து -பெரணமல்லூர், வந்தவாசியிலிருந்து -நெல்லூர், வந்தவாசியிலிருந்து - குறிப்பேடு, ஆகிய பகுதிகளுக்கு போதுமான பஸ் வசதியில்லாததினால்அந்த கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய வயதானவர்கள் பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக சிரமப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் மேல் சிகிச்சைக்காக வந்தவாசி தலைமை மருத்துவமனைக்கு தான் வர வேண்டும். அவ்வாறு வருவதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் ஷேர் ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனங்களில் சிகிச்சைக்கு வர வேண்டியுள்ளது. . குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்படுவதால் முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே அரசு சில குறிப்பிட்ட கிராமபுற வழித்தடங்களை ஆய்வு செய்து முறையாக வழித்தடங்களை அதிகப்படுத்திட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்